Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 24, 2018

செவிலியர் பட்டயப் படிப்பு: 3,500 விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழகத்தில் செவிலியர் பட்டயப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 3,500 விண்ணப்பங்கள் மாணவர்களால் பெறப்பட்டுள்ளன.




தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப்படிப்பு கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2
ஆயிரம் இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், ஊட்டி, திருப்பூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 8 இடங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் விண்ணப்பங்கள் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர www.tnhelath.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களிலும் விண்ணப்பங்ளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 300 ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவிகள் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களைச் சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
முதல் நாளான திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் 3,500 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஜூலை 30 கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூலை 30-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 ஆகும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி தகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்