Friday, July 13, 2018

4 நாட்கள் கனமழை! மழை நிலவரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை.!

நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது என்பதால் , சில பள்ளிகள் மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளனர். சில பகுதிகளில் முழங்கால் அளவுக்கு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்ப அஞ்சுகின்றனர். 



எனவே விடுமுறை அறிவிக்காத பள்ளிகளிலும் அதிகளவு மாணவர்கள் வருகைபுரியவில்லை. சென்னையை பொறுத்தவரை மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாண்டிச்சேரி, கோவை, சேலம், மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து தமிழக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழைப்பொழிவை தரும் தென்மேற்குப் பருவக்காற்று மீண்டும் வலுப்பெற்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 96 - 104 சதவிகிதம் வரை தென்மேற்குப் பருவமழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

மும்பையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழை நிலவரத்தை பொறுத்து, தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். என்று மும்பை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.



Popular Feed

Recent Story

Featured News