Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 24, 2018

5 வருட சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது 26-ந் தேதி வரை நடக்கிறது

தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகள், திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்டக்கல்லூரி ஆகியவற்றில் 5 வருட ஒருங்கிணைந்த எல்.எல்.பி. படிப்பில் சேர 1,411 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 7 ஆயிரத்து 342 விண்ணப்பங்கள் தகுதியாக ஏற்கப்பட்டன.

இதையடுத்து சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளாக பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது.



சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் தம்ம சூரியநாராயண சாஸ்திரி முதல் 5 இடங்களை பெற்ற மாணவிகள் ஆர்.ஷாலினி, எஸ்.சுமதி, கே.விக்டோரியா, எம்.கீர்த்தனா, கே.ஏ.ஸ்வேதா ஆகியோருக்கு சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு உரிய ஆணையை வழங்கினார். முதல் 5 இடங்களில் மாணவர்கள் யாரும் வரவில்லை.

இவர்களில் மாணவி விக்டோரியா மதுரை அரசு சட்டக்கல்லூரியை தேர்ந்து எடுத்தார். மற்றவர்கள் கோவை அரசு சட்டக்கல்லூரியை தேர்வு செய்தனர். கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை தலைவர் நாராயண பெருமாள் செய்திருந்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) பழங்குடியினருக்கும், அருந்ததியினருக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு 26-ந்தேதி முடிவடைகிறது.



கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்