Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 24, 2018

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 6-இல் கலந்தாய்வு

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

டி.எம்., எம்.சிஎச். ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு தமிழகத்தில் 192 இடங்கள் உள்பட, நாடு முழுவதும் 1215 இடங்கள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக இடங்கள் உள்ளன. 



இந்த இடங்களுக்கு 2018 - 2019-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 31 துறைகளுக்கான தகுதிப் பட்டியல் தனித்தனியே வெளியிடப்பட்டது.

தகுதிப் பட்டியலின் அடிப்படையில் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் (டிஜிஹெச்எஸ்) கலந்தாய்வை நடத்த உள்ளது. கலந்தாய்வு அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் டிஜிஹெச்எஸின் ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 6-இல் கலந்தாய்வு: அதன்படி, கலந்தாய்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 6-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற்று இடங்கள் ஒதுக்கப்படும். கலந்தாய்வு முடிவுகள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியிடப்படும்.
இடங்களைப் பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைமுறைகள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



எம்.பி.பி.எஸ். படிப்பில் 15 சதவீதம், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்தும். ஆனால் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரையில் அனைத்து இடங்களுக்கான கலந்தாய்வையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககமே நடத்துவது குறிப்பிடத்தக்கது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்