தமிழக எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்களில் 70 சதவீத இடங்கள் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2018 - 2019-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற கலந்தாய்வில் சிறப்புப் பிரிவினருக்கான 40 இடங்கள் நிரம்பின. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
கலந்தாய்வில் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கைக் கடிதத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களில் 2 மற்றும் 4-ஆம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். மீதம் உள்ள 8 பேர் பங்கேற்கவில்லை.
ஆர்.ராஜ் செந்தூர் அபிஷேக், முகமது ஷாகிப் ஹசன், ஆ.எஸ்.சுப்ரியா, எஸ்.சபரீஷ், அனகா நிடுகலா ஷியாம்குமார், சிரிஷ் செந்தில் குமார், எம்.தினகர், ஆல்பிரட் விவியன் ஆல்வின், எச்.சதீஷ், ஜெ.ஜோஷ்வா அஜய் ஆகியோர் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளனர். அனைவரும் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு: தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால் வெளிமாநிலத்தில் பிளஸ் 2 வரை படித்து, நீட் தேர்விலும் வெளிமாநிலத்தவர் என்று குறிப்பிட்டு தேர்வெழுதிய மாணவரில் ஒருவர், தனக்கு தமிழக மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க இடமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
வழக்கின் முடிவில் குறிப்பிட்ட மாணவரைக் கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த மாணவரின் பெயர் தமிழக இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
70 சதவீத இடங்கள்: மருத்துவக் கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கே கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: கலந்தாய்வில் உள்ள மொத்த இடங்களில் 70 சதவீத இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் 30 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. மிகச் சரியான எண்ணிக்கை கலந்தாய்வின் முடிவில் தெரிய வரும்.
நீதிமன்ற உத்தரவின்படி வெளிமாநிலத்தில் படித்த ஒரு மாணவரின் பெயர் தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதனால் அதே நிலையில் உள்ள பிற மாநிலத்தில் இருந்து விண்ணப்பித்த தமிழகத்தைச் சொந்த மாநிலமாகக் கொண்ட 90 மாணவர்களின் பெயர்கள் புதிதாக தரவரிசைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 28 அல்லது 29 மாணவர்கள் இடங்களைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
கலந்தாய்வு முடிவு: திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 580 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். முடிவில் அரசு கல்லூரிகளில் 572 எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் கல்லூரிகளில் ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடம் என மொத்தம் 573 இடங்கள் நிரம்பியுள்ளன.
இன்றைய கலந்தாய்வு: பொதுப் பிரிவினருக்கு தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசை 598-இலிருந்து 1417 வரை பெற்ற 820 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்.
173 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள்
தமிழகத்தில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் இரண்டு கல்லூரிகளிலும் 98 மற்றும் 75 என மொத்தம் 173 எம்.பி.பி.எஸ்.இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளின் பெயர்கள் கலந்தாய்வு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்டுள்ள இடங்களின் காரணமாக தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 3,328-இலிருந்து 3,501 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.