Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 2, 2018

மத்திய தொழிலாளர் அமைப்பு நிறுவனத்தில் 875 பணியிடங்கள்

மத்திய அரசு நிறுவனத்தில் 875 பணியிடங்கள். மத்திய தொழிலாளர் அமைப்பு நிறுவனத்தில் 875 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய தொழிலாளர் துறையின் கீழ் ‘லேபர் பீரோ’ எனப்படும் தொழிலாளர் பணியக அமைப்பு செயல்படுகிறது. 



சென்னை, மும்பை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த அமைப்பின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த அமைப்பின் பல்வேறு கிளையிலும் சூப்பிரவைசர், இன்வெஸ்டிகேட்டர், கன்சல்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.



மொத்தம் 875 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னை, மும்பை, அகமதாபாத், சண்டிகார், கான்பூர், கொல்கத்தா, கவுகாத்தி போன்ற கிளைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. இதில் சென்னைக்கு மட்டும் சூப்பிரவைசர் பணிக்கு 38 இடங்களும், இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு 232 இடங்களும், கன்சல்டன்ட் பணிக்கு 2 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கன்சல்டன்ட் பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம் வரையும், சூப்பிரவைசர் பணிக்கு மாதம் 21 ஆயிரத்து 120 வரையும், இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு 19 ஆயிரத்து 800 வரையும் ஊதியம் பெற முடியும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.



கல்வித்தகுதி: பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.இ., புள்ளியியல், கணிதவியல், எக்கனாமிக்ஸ் படித்தவர்கள் இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சூப்பிரவைசர் மற்றும் கன்சல்டன்ட் பணிக்கு எக்கனாமிக்ஸ், அப்ளைடு எக்கனாமிக்ஸ், பிசினஸ் எக்கனாமிக்ஸ், எக்கனாமெட்ரிக்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ், மேத்த மேடிக்ஸ், காமர்ஸ் போன்ற பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களும், சூப்பிரவைசர் மற்றும் கன்சல்டன்ட் பணிக்கு 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். புகைப்படம் கையொப்பம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அறிவிப்பில் இருந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.



இதற்கான அறிவிப்பு 25-6-2018 அன்று வெளியாகி உள்ளது. 5-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.lbchd.in/ApplicationForm.aspx என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Popular Feed

Recent Story

Featured News