தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கட்டிடங்கள் பழுது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஆய்வின் முடிவில் கட்டிடங்கள் பழுது பார்த்து, தேவையெனில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
நீட் தேர்வுக்காக 413 மையங்கள் அமைத்து பயிற்சி அளித்ததில் தமிழக அரசுக்கு ரூ.4.5 கோடி செலவாகியுள்ளது என்றும் வருகிற ஜூலை 15ம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்காக 413 மையங்கள் அமைத்து பயிற்சி அளித்ததில் தமிழக அரசுக்கு ரூ.4.5 கோடி செலவாகியுள்ளது என்றும் வருகிற ஜூலை 15ம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.