பிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும் திட்டத்திலேயே முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 28, 2018

பிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும் திட்டத்திலேயே முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு

இபிஎப் தொகையை எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? தொழிலாளர்களே முடிவு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படும் தொகையை எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என தொழிலாளர்களே முடிவு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



இபிஎப் பயனாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி தற்போது வழங்கப்படுகிறது. பிடித்தம் செய்யப்படும் தொகையில் பெரும் பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுக்கு 16 சதவீதம் அளவுக்கு தொழிலாளர் வைப்பு நிதி அமைப்புக்கு வருவாய் கிடைத்துள்ளது.



 இந்த நிலையில் அதிக லாபம் ஈட்டும் வகையில் பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் எதில் முதலீடு செய்யலாம் என தொழிலாளர்களே முடிவு செய்து கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad