Monday, July 9, 2018

பயோமெட்ரிக் வருகை பதிவேடு - அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த தமிழக அரசு வலியுறுத்தும்.



வருகிற 15 -ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு முறை அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News