Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 22, 2018

ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு :

ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி தமிழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்து, சென்னை மாநகராட்சி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


இக்கல்வியாண்டில் (2018-19) குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு தமிழ் கற்றலை இனிமையுடன் கற்கும் பொருட்டு, ‘’தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’’ என்ற தலைப்பில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மண்டலம் வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை இடைவெளிவிட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.



இப்பயிற்சி வகுப்பானது, பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 21 ஆண்டுகள் அனுபவமிக்க இடைநிலை ஆசிரியரான டாக்டர் கனகலட்சுமியால் நடத்தப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘’தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையினை ஒப்படைப்பு செய்துள்ளார். மேலும், இவர் திருவண்ணாமலை மாவட்டம் முழுமையும் 2,198 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, கடந்த ஏப்ரல் 19ம் நாள் உலக சாதனைக்காக 1,56,170 குழந்தைகளை ஒரே நேரத்தில் செய்தித்தாள்களை வாசிக்கவும், எழுதவும் செய்துள்ளார். அவரை கருத்தாளராக தேர்வு செய்து இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 




இப்பயிற்சியானது, பெருநகர சென்னை மாநகராட்சி கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது மட்டுமின்றி, கற்கும் மாணவ/மாணவியர்கள் தமிழை எளிமையாக கற்பது மட்டுமின்றி, தமிழ் வாசிப்புத் திறனும் மேம்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.