Sunday, July 29, 2018

ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு!- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு
பயோமெட்ரிக் வருகை பதிவு இன்னும் ஒரு வாரக் காலத்தில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்



ஈரோட்டில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற கொங்கு வேளாளர் இளைஞர் சங்கத்தின் வாசக சாலை திறப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆங்கில வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும். மாநிலத்தில் 32 மாவட்டங்களிலும் உள்ள நூலகங்களிலும் ஐ.ஏ.எஸ். அகாடமிகள் தொடங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக இந்த ஆண்டு 25 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டயக் கணக்கு சிறப்பு பயிற்சி அளிக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள் அனைத்தும் கணினி மையமாக்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்



Popular Feed

Recent Story

Featured News