Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 6, 2018

வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க, மாணவர்களுக்கு தோப்புக்கரணப் பயிற்சி!!!

வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க,உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தோப்புக்கரணம் போட்டு, பயிற்சி அளிக்கப் படுகிறது.
ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்தில், வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை அலமேலு தலைமையில், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். 6 - 10ம் வகுப்பு வரை, 155 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

காலை, 9:30 மணிக்கு, பள்ளி துவங்கியதும், மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க, தோப்புக்கரணம் பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரும், 10 தோப்புக்கரணம் போடுகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பயிற்சிக்கும் முன்னோடியாக, தோப்புக்கரணம் திகழ்கிறது. 



இதை செய்வதால், அனைத்து நரம்பு மண்டலத்துக்கும், சீரான ரத்த ஓட்டம் கிடைத்து, மாணவர்கள் சுறுசுறுப்படைவர். காதை பிடித்து, உட்கார்ந்து எழும்போது, மூளை நரம்புகள் துாண்டப்படும்.இதனால், மூளை செயல்பாட்டை ஒருநிலைப்படுத்த முடியும். 

ஆட்டிசம் குறைபாடு தவிர்க்கப்படும்; கற்றல் குறைபாடு நிவர்த்திஆகும்.



தொடர் பயிற்சியால், வகுப்பு துவங்கும் முன்பே, அவரவர் வகுப்பறையில், மாணவர்கள், தாங்களாகவே ஆர்வமாக தோப்புக்கரணம் போடுகின்றனர். உடல்நிலை சரியில்லாவிடில், கட்டாயப் படுத்துவதில்லை. இதேபோல், நகம் வெட்டுதல், கைகளை சுத்தமாக கழுவுதல், என சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இதனால், எங்கள் மாணவர்களுக்கு, தலைவலி, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Popular Feed

Recent Story

Featured News