Friday, July 20, 2018

எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் போட கூடாத பதிவுகள். இருந்தால் நீக்கி விடவும்

என்னதான் சமூக வலைத்தளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் இதிலும் பல தீமைகள் உள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தகவல் திருட்டு. இந்த பிரச்னைகள் வராமல் இருப்பதற்கான சில முக்கிய எச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை காணலாம்.



பலர் தங்களுடைய பிறந்த தேதியை கடவு சொல்லாக வைத்திருப்பார்கள். எனவே பிறந்த தேதியை குறிப்பிடாமல் இருப்பது அல்லது மாற்று தேதியை சமூக வலைத்தளங்களில் வைப்பது வைப்பது நல்ல தீர்வாக அமையும்.

பர்சனல் புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிடுபவர்கள் நண்பர்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்வது நல்லது. குறிப்பாக நீங்கள் பதிவிட்டிருக்கும் செல்போன் எண்ணால் பல தொந்தரவுகள் வரலாம்.

குழந்தைகளின் படங்கள் மற்றும் தகவல்களை பகிர வேண்டாம் காரணம் அவர்களின் வெளியே செல்லும் நேரம், இடம் போன்றவை குற்றவாளிகளுக்கு தகவல்களை கொடுக்கும்.



நீங்கள் இருக்கும் இடங்களையும் செல்லும் இடங்களையும் பகிர வேண்டாம் ஏனெனில் சில திருட்டு சம்பங்களுக்கு இது தகவல் தருவதாக அமைந்து விடுகிறது.

Popular Feed

Recent Story

Featured News