அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் எம்பிபிஎஸ் விண்ணப்பம், புகைப்பட குளறுபடியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் கோகுல கிருஷ்ணன். இவர் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் தொடுவானம்' என்ற நீட் பயிற்சியில் இணைந்து படித்துள்ளார்.
நீட் தேர்வில் 392 மதிப்பெ பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் கோகுல கிருஷ்ணன்தான்.
இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அரசு எம்.பி.பி.எஸ். இடத்தைப் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர் விசாரித்தபோது, விண்ணப்பத்தில் மாணவரின் புகைப்படம் சரியாக ஒட்டப்படவில்லை என்றும், அதன் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மனமுடைந்த மாணவர், கலை -அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் படிப்பில் சேர்ந்துவிட்டார். ஆனால், இதுபோன்ற சிறிய காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் கூறுகையில், குறிப்பிட்ட மாணவரின் விண்ணப்பம் புகைப்படத்தில் ஏற்பட்ட குளறுபடியினால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதனை மீண்டும் பரிசீலனை செய்து தரவரிசைப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.