கிண்டி (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இயங்கி வரும் தொழில் பிரிவுகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிண்டி (மகளிர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இயங்கி வரும் தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இந்த கலந்தாய்வு வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறும். விண்ணப்பித்த மாணவியர் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விவரம், அவர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.
கலந்தாய்வு தொடர்பான விவரங்களை அறிய www.skilltraining.tn.gov.in
இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து கலந்தாய்வுக்கான நாள் மற்றும் நேரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவியர், அசல் மதிப்பெண் சான்றிதழ், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் ஜாதி சான்றிதழ், அசல் ஆதார் அட்டை, 5 புகைப் படங்கள், அனைத்து சான்றிதழ்களின் இரு நகல்கள் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் என ஆட்சியர் அலுவலகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.