Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 24, 2018

இன்று முதல் கால்நடை மருத்துவக் கலந்தாய்வு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவ பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) தொடங்க உள்ளது.



இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக் உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.

முதல்நாளான செவ்வாய்க்கிழமை பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பு மற்றும் பி.டெக் படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும். காலை 11.30 மணிக்கு பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பில் தொழில்கல்வி பிரிவினருக்கான ஒதுக்கீடு நடைபெறும். 




பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறும். பொதுப்பிரிவில் முதல் பத்து இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சேர்க்கைக் கடிதத்தை வழங்க உள்ளார்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்