Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 5, 2018

ரயில்வேயில் ஒரு லட்சம் பணியிடங்கள்!

ரயில்வேயில் ஒரு லட்சம் பணியிடங்கள்!

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தல் 2019க்கு முன்பாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய பணியிடங்களையும் உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.



இதனைத்தொடர்ந்து, ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோகானி கூறியிருப்பதாவது, ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படுவதாகவும், தற்போது ஒரு லட்சத்துப் பத்தாயிரம் காலி பணியிடங்கள் உள்ள இந்த பணியிடங்களுக்கு 2 கோடியே 27 லட்சம் பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கான தேர்வுகள் வருகின்ற செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்றும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உடல்தகுதித்தேர்வு மற்றும் உளவியல் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், பணி இடங்களுக்கான பணி நியமனம் 2019ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மொத்தக் காலியிடங்களில் 50 சதவிகிதமாக இருக்கும் காலியிடங்களுக்கு ரயில்வே ஒரு காத்திருப்புப் பட்டியலை வெளியிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 26,502 பணியிடங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 62,907 குழு டி பணியிடங்கள் உள்ளன.



இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் இந்தி, ஆங்கிலம், உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட 15 மொழிகளில் நடைபெறும் என்றும் கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News