Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 21, 2018

மருத்துவ கல்வி கட்டணம் ஒழுங்குபடுத்த கமிட்டி

நிகர்நிலை பல்கலைகளில் மருத்துவ படிப்புக்கு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்த, ஆய்வு கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வு கட்டாயமானது.

இதனால், அனைத்து நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கும், நீட் கட்டாயமானது. நீட் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியலின்படி, மருத்துவ படிப்புகளில் சேர்க்க, நிகர்நிலை பல்கலைகளுக்கும் அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.



ஆனால், கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்த்தாலும், தனியார் நிகர்நிலை பல்கலைகள், மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பல பல்கலைகள், கோடிக்கணக்கில் வசூலிப்பதால், நீட் தேர்வு இருந்தாலும், பணம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.



இதை மாற்றும் வகையில், நிகர்நிலை பல்கலைகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியாக கட்டண ஒழுங்குமுறை கமிட்டி, பல்கலை மானிய குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக, 'எய்ம்ஸ்' மருத்துவ கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர், ஆர்.சி.ரேகா நியமிக்கப்பட்டுள்ளார்.