"ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணேஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே"
-தொல்காப்பியர்-
உயிர் வகைகளைத் தொல்காப்பியர் ஆறுவகைகளாகப் பாகுபாடு செய்கின்றார்.
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணேஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே"
-தொல்காப்பியர்-
உயிர் வகைகளைத் தொல்காப்பியர் ஆறுவகைகளாகப் பாகுபாடு செய்கின்றார்.
ஓரறிவுயிர்:
புல்லும் மரனு மோரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மெய்யினால் உணரும் உணர்வுடைய புல்,மரம் முதலியவற்றை ஓரறிவு உயிர்களாகக்கூறுவர். ஓரறிவு உயிர்களைத்தொல்காப்பியர் இரண்டாகப் பகுத்துக்காண்கின்றார்.
”புறக்கா ழனவே புல்வென மொழிப”
வெளியே சதைப்பற்று உடையனவாய்உள்ளே சதைப்பற்று அற்றனவாய்உள்ளனவற்றைப் புல் என்பர் புல்லின்உறுப்புக்களாக,
தோடே மடலே யோலை யென்றா
ஏடே யிதழே பாளை யென்றா
ஈர்க்கே குலையடின நேர்ந்தன பிறவும்
புல்வொடு வருமெனச் சொல்லினர் புலவர்என்கிறார்.
”அகக்காழனவே மரமென மொழிப”
உள்ளே சதைப்பற்று உடையனவாய்வெளியே அற்றனவய் உள்ளனவற்றைமரம் என்பர். மரத்தின் உறுப்புக்களாக,
இலையே தளிரே முறியே தோடே
சினையே இழையே பூவே யரும்பேஎன்கிறார்.
ஒருவித்திலை மற்றும் இருவித்திலைதாவரங்களுக்குப் பொதுவாக,
காயே பழமே தோலே சுவையும் செதிளேவீழோ டென்றாங் சுவையும் அன்னஎன்கிறார்.
ஈரறிவுயிர்:
மெய்யினால் உணர்ந்து கொள்வதுடன்வாயினால் உணரும் சுவைஉணர்வுடையவைகள் ஈரறிவுஉயிர்களாகும்.
நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவுமுளவே யக்கிளைப் பிறப்பே என்கிறார்.நந்தும் முரளும் ஈரறிவுடையஉயிர்களாகும். சங்கு, நத்தை, அலகு,நொள்ளை என்பனவும் கொள்ளலாம்என்பது இளம்பூரணர் கருத்து.
மூவறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல் என்ற இரண்டுஉணர்வுடன் மூக்கினால் உணர்ந்துகொள்ளும் திறன் படைத்தவைகள்மூவறிவு உயிர்களாகும்
சிதலு மெறும்பு மூவறி வினவே பிறவுமுளவே யக்கிளைப் பிறப்பே சிதலும்எறும்பும் உற்றுணர்வும் நாவுணர்வும்மூக்குமுடையனவாதலால்மூவறிவுயிராகும். இவற்றின்கிளைகளாவன ஈயன் மூதாய் போல்வன.
நான்கறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல் என்றமூன்று உணர்வுடன் பார்த்தல் திறன்படைத்தவைகள் நான்கறிவுயிர்களாகும்.நண்டுந் தும்பியு நான்கறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்வுஒழித்து ஒழிந்த நான்கு உணர்வுகளும்உள. பிறவும் என்றதனால் ஞ’மிறும்சுரும்பும் எனக் கொள்க என்பார்இளம்பூரணர்.
ஐயறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல்என்ற நான்கு உணர்வுடன் கேட்டல் திறன்படைத்தவைகள் ஐயறிவுயிர்களாகும்.மாவும் மாக்களும் ஐயறி வினவே பிறவுமுளவே யக்கிளைப் பிறப்பே மாவென்பனநாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார்மனவுணர்ச்சியில்லாதவர்.கிளையென்பன எண்கால் வருடையும்குரங்கும் போல்வன.
ஆறறிவுயிர்:
ஐந்து அறிவோடு பகுத்தறிவும் திறன்படைத்தவன் மக்கள் பகுத்தறியும் திறன்அற்றவர்களை மாக்கள் என்று அழைப்பர்.
மக்கள் தாமே யாறறி வுயிரே பிறவு முளவேயக்கிளைப் பிறப்பே என்பதன் மூலம்ஆறறிவு படைத்த மாந்தருடன் பிறஉயிரினங்களையும் இணைத்துக்கூறுவதன் மூலம் அறியலாம்.
தொல்காப்பியர் மரபியலுள் ஒன்று முதல்ஆறறிவு படைத்த உயிரினங்களின்இயல்பையும் அவ்வுயிரினங்கள்தொடர்பான மரபு வழிப்பட்டபெயரினங்களையும் ஆராய்ந்து பல அரியஉண்மைகளைக் கூறுகிறார்.இச்செய்திகள் மூலம் தொல்காப்பியரின்உயிரியல் அறிவு தொடர்பானசிந்தனைகளை விளங்கிக் கொள்ளமுடிகிறது.
தொடு உணர்வு கொண்ட உயிரே முதல்உயிர் என்றும் ஓரறிவு உயிர் என்றும்அவற்றிலிருந்தே ஈரறிவு உயிர், மூவறிவுஉயிர், நான்கறிவு உயிர், ஐந்தறிவு உயிர்முதலான அனைத்தும் உருவாயின என்பர்.இதனைத் தொல்காப்பியர்,
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரேஎன்கிறார்.
அறிவியல் வளராத பல்லாயிரம்ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்களின்இனம், பெயர், பாகுபாடு, அறிவுபோன்றவை குறித்து ஆராய்ந்துதெளிவாக உணர்த்தியதொல்காப்பியனாரின் புலமைவியப்புக்குரியது.
தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள்ஆகியவற்றின் இலக்கணங்கள்அனைத்தையும் முன்னோர் வழங்கிய மரபுபிறழாமல் கூறியுள்ளார். முன்னையஆசிரியர்களைத் தொல்காப்பியர்,என்மனார் புலவர், என்ப என்றதொடர்களால் குறிப்பிடுவதும்,
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி விரவும்பொருளும் விரவும் என்ப என்றும்,
மரபுநிலை திரியற் பிறிது பிறிதாகும்போன்ற நூற்பாக்களைஅமைத்திருத்தலை உற்று நோக்குவதன்மூலம் அறியலாம்.
உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றியடார்வினின் கருத்துக்களும்தொல்காப்பியரின் கருத்துக்களும்ஒன்றுபட்டும் வேறுபட்டும்காணப்படுகின்றன. அறிவுரைகளைக்கொண்டு உயிர்களைப் பிரிக்கும்நிலைதான் தொலகாப்பியரின் முறை.தொல்காப்பியரின் எண்ணப்படிஅறிவுரைகளின் வளர்ச்சிக்குஎல்லையேனும் குறிக்கப் பெறவில்லை.
டார்வினுடைய கொள்கைப்படி உயிர்பெருக்கத்திற்கு இன வேறுபாடு அவசியம்.தசைக் குழம்பான நிலையிலேயே இனஉறுப்புகள் இருந்தன. அவற்றின்உதவியுடன் உயிரினம் பெருகியது.நாளடைவில் பல்வேறு மாற்றங்களுடன்இன்று மனிதன் வளர்ச்சி நிலையைஅடைந்திருக்கிறான் என்பது டார்வினின்பரிணாமக் கொள்ளை உணர்த்துகின்றஉண்மை.
தொல்காப்பியர் கூறும் மனிதஇனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சிபெரும்பாலும் அறிவியல் முறைகளுடன்ஒத்துள்ளது. அவ்வாறு பார்க்கும்நிலையில் டார்வினின் விளக்கம்அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
உணர்வுகள் படிப்படியே தோன்றும்வளர்ச்சி நிலை பற்றி உயிர்களை ஆறுபிரிவாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார்.