Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 30, 2018

மாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஈரோடு: ''மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



ஈரோட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி: நொய்யல் ஆற்றை பாதுகாக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிதி மூலம், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தொழிற்சாலை கழிவுகள், அங்கு சேராமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து, அங்குள்ள கழிவுகளை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான பணிகள், விரைவில் துவங்கும்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

தற்போது, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி படிக்க, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, ஆங்கில வழி வகுப்புகளை, இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. 



இதனால், இரண்டு வகுப்புகள் கூடுதலாக நடத்தப்படும்.மாநில அளவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' நடத்தப்படும். ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு புதிய பாடத் திட்டம் வந்துள்ளதால், அம்மாணவர்கள், 'க்யூ ஆர் கோடு' மற்றும் இணையதளம் வழியே கல்வி பயில, கையடக்க கணினி எனும், 'டேப்' வழங்கப்படுகிறது.

இதற்காக, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, இந்த வாரம் டெண்டர் முடிவு செய்யப்படும். விரைவாக, 'டேப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Popular Feed

Recent Story

Featured News