Sunday, July 15, 2018

மாநில பள்ளிகளில் தாய்மொழி கட்டாயம்.துணை ஜனாதிபதி அறிவுறுத்தல்

டில்லி:
அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியை கட்டாயமாக கற்பிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று துணை ஜனாதிபதி கூறியுள்ளார்.



டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,''கலாசாரம், மதிப்பு மற்றும் பாரம்பரியத்தை உள்ளடக்கியதாக தாய்மொழி விளங்குகிறது. பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் நாம். மூத்தவர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க கூடியவர்கள்.

அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுபவர்கள். இயற்கைக்கு மரியாதை அளிப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனில் மரபணுவில் உள்ளது. ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்பிக்கலாம். ஆனால் தாய்மொழியை புறக்கணிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயம் கற்பிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.



Popular Feed

Recent Story

Featured News