Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 20, 2018

எம்.எஸ்.வேர்டு டாக்குமெண்டை பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பது எப்படி?


பொதுவாக மைக்ரோசாப்ட் வேர்டை பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் அந்த வேர்டில் பதிவு செய்யப்படும் டாக்குமெண்ட்டை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பது குறித்த கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும். சில சமயம் வேர்டு டாக்குமெண்ட்டை ஒருசில குறிப்பிட்டவர்கள் மட்டும் படிப்பதற்காக பதிவு செய்து வைத்திருப்போம். இந்த எம்.எஸ்.வேர்டு 365 நமது பாதுகாப்பிற்காக பல டுல்ஸ்களை வைத்துள்ளது. இதனை தற்போது பார்ப்போம்

ஸ்டெப் 1 : நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்த எம்.எஸ்வேர்ட் டாக்குமெண்ட்டை முதலில் ஓப்பன் செய்யுங்கள்



ஸ்டெப் 2: அதில் ஃபைல் என்பதை க்ளிக் செய்து அதன்பின்னர் கீழே தோன்றுவதில் உள்ள 'புரடொக்ட் டாக்குமெண்ட்' என்பதை க்ளிக் செய்யவும்

ஸ்டெப் 3: அதில் உள்ள 'என்கிரிப்ட் வித் பாஸ்வேர்டு' என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்

ஸ்டெப் 4: அதன் பின்னர் ஒரு என்க்ரிப்ட் டாக்குமெண்ட் ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் ஒரு பாஸ்வேர்டை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். நீங்கள் கிரியேட் செய்யும் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக, எளிதில் யாரும் ஊகிக்க முடியாததாக இருக்க வேண்டும். பாஸ்வேர்டை கிரியேட் செய்த பின்னர் ஓகேவை க்ளிக் செய்யவும்



ஸ்டெப் 5: மீண்டும் ஒரு முறை ஏற்கனவே பதிவு செய்த பாஸ்வேர்டை க்ளிக் செய்து அதன் பின்னர் ஓகேவை க்ளிக் செய்யவும்

ஸ்டெப் 6: மீண்டும் ஒருமுறை டாக்குமெண்ட்டை சேவ் செய்து பின்னர் டாக்குமெண்ட்டை மூடிவிடவும்




ஸ்டெப் 7: இப்போது நீங்கள் அதே டாக்குமெண்ட்டை ஓப்பன் செய்து பார்த்தால் நீங்கள் பதிவு செய்த பாஸ்வேர்டை கேட்கும். அந்த பாஸ்வேர்டை பதிவு செய்து அதன்பின்னர் ஓகே செய்தால் டாக்குமெண்ட் ஓப்பன் ஆகும்
இப்போது நீங்கள் பதிவு செய்த பாஸ்வேர்டை நீக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்

ஸ்டெப் 1: ஃபைல் என்பதை கிளிக் செய்தௌ அதன் பின்னர் 'புரடொக்ட் டாக்குமெண்ட் என்பதை க்ளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 2: அதில் உள்ள 'என்கிரிப்ட் வித் பாஸ்வேர்டு' என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் புதியதாக ஒரு விண்டோ தோன்றி, அதில் உங்கள் பாஸ்வேர்டு புள்ளிகள் போல் தோன்றும், அதை டெலிட் செய்துவிட்டு பின்னர் ஓகே செய்தால் போதும்,

ஸ்டெப் 3: அதன்பின்னர் டாக்குமெண்ட்டை சேவ் செய்துவிட்டால் உங்கள் டாக்குமெண்டில் உள்ள பாஸ்வேர்டு நீக்கப்பட்டுவிடும். நீங்கள் அடுத்தமுறை அதே டாக்குமெண்ட்டை ஓப்பன் செய்யும்போது பாஸ்வேர்டு இல்லாமல் ஓப்பன் ஆகும்.

ஒரு முக்கிய விஷயம்: நீங்கள் வேர்டில் பதிவு செய்யப்படும் பாஸ்வேர்டு உங்களுக்கு நன்கு அறிமுகமானதாகவும் ஞாபகம் வைத்து கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். 

ஏனெனில் பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டால் அதன்பின்னர் அந்த டாக்குமெண்ட்டை ஓப்பன் செய்ய வேறு வழியே இல்லை. அதனால் நீங்கள் உங்கள் டாக்குமெண்ட்டை இழக்கவும் நேரிடலாம். எனவே உங்கள் மனதில் ஞாபகம் வைத்து கொள்ளூம் வகையில் உங்கள் பாஸ்வேர்டு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். உங்கள் பாஸ்வேர்டை ஒரு குறிப்பிட்ட இடத்தில் டைப் செய்து வைத்து கொண்டால் எதிர்காலத்தை மறந்தாலும் அது உங்களுக்கு உதவும்



கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்