Thursday, July 12, 2018

வாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் குறுந்தகவல் செயலியை நம்மில் பலர் எந்நேரமும் பயன்படுத்தி வரும் சூழலில், சில சமயங்களில் அதனை கம்ப்யூட்டரில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்த சிக்கலை சரிசெய்யவே வாட்ஸ்அப் வெப் சேவை துவங்கப்பட்டது. இதை கொண்டு பிரவுசரிலும் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.



வழக்கமான வாட்ஸ்அப் வெப் இன்றி மற்றொரு வழிமுறையை கொண்டும் வாட்ஸ்அப் செயலியை கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும். இதற்கு செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.எவ்வாறு டவுன்லோடு செய்ய வேண்டும்

எனினும் இவ்வாறு செய்ய விண்டோஸ் 8.1 இயங்குதளம் அல்லது அதற்கும் பின் வெளியிடப்பட்ட இயங்குதளம், மேக் ஐஓஎஸ் எக்ஸ் 10.9 அல்லது அதற்கும் பின் வெளியிடப்பட்ட பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். செயலியை எவ்வாறு டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

விண்டோஸ் 8.0+ இன்ஸ்டால் செய்வது எப்படி?



- முதலில் இன்டர்நெட் பிரவுசர் -- க்ரோம், ஃபயர்ஃபைக்ஸ், ஓபேரா, எட்ஜ் ( Chrome, Firefox, Opera, Edge) எதையேனும் ஒன்றை கம்ப்யூட்டரில் திறக்க வேண்டும்.

- இனி https://www.whatsapp.com/download இணைய முகவரியை காப்பி செய்து பிரவுசரில் பேஸ்ட் செய்ய வேண்டும்.

- அடுத்து விண்டோஸ் இயங்குதளத்தில் [click on download for Windows (64-Bit)] ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- டவுன்லோடு நிறைவுற்றதும் WhatsApp.exe-ஐ திறக்க வேண்டும்.

- வாட்ஸ்அப் உங்களது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.

- இன்ஸ்டால் ஆனதும், கம்ர்யூட்டர் திரையில் கியூ.ஆர். கோடு (QR code) தெரியும்.

- இனி ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து, வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்து லாக்-இன் செய்யலாம்.
மேக் ஓஎஸ் எக்ஸ் 10.9+ இன்ஸ்டால் செய்வது எப்படி?

- முதலில் இன்டர்நெட் பிரவுசர் -- க்ரோம், ஃபயர்ஃபைக்ஸ், ஓபேரா, எட்ஜ் ( Chrome, Firefox, Opera, Edge) எதையேனும் ஒன்றை கம்ப்யூட்டரில் திறக்க வேண்டும்.



- இனி https://www.whatsapp.com/download இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.

- அடுத்து மேக் ஓஎஸ் எக்ஸ் 10.9 அல்லது அதற்கும் அதிக இயங்குதளங்களில் டவுன்லோடு செய்யக் கோரும் Download for Mac OS X 10.9 and higher ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- முதல் முறை இன்ஸ்டால் செய்யும் போது, செயலி அப்ளிகேஷன்ஸ் ஃபோல்டரில் வாட்ஸ்அப்-ஐ சேர்த்து, டெஸ்க்டாப் டாக்கில் வைக்க வேண்டுமா என்ற ஆப்ஷன் திரையில் தெரியும்.
இன்ஸ்டால் ஆனதும்

- இன்ஸ்டால் ஆனதும், கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப்-ஐ திறந்து, கியூ.ஆர். கோடு மூலம் லாக்-இன் செய்ய வேண்டும்.

- இதே போன்று ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய முடியும்.



Popular Feed

Recent Story

Featured News