Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 7, 2018

அதிகம் வேலை செய்தால் சர்க்கரை நோய் வருமா?

பெண்களுக்கு வேலைகள் ஒன்றும் பஞ்சமில்லை. காலையில எந்திரிச்சி நைட்டு படுக்குறதுக்குல சும்மா பம்பரமா சுத்த வேண்டியிருக்கு. அதுவும், குறிப்பாக வேலைக்கும் போகும் பெண்களுக்கு, குழந்தைக்கு சாப்பாடு செஞ்சிக்கொடுத்து, ஸ்கூலுக்கு ரெடிபண்ணிக்கொடுத்து, அப்புறம் கணவனுக்கு லஞ்ச் பேக் பண்ணி, சாப்பிட்டும் சாப்பிடாமலையும் அலுவலகத்துக்கு அவசர அவசரமாக கிளம்பும் பெண்களை அஷ்டாவதானி என்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களைக் கொண்டு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக வாரத்திற்கு 45 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்யும் பெண்களுக்கு சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் 70 சதவிகிதம் உள்ளது என்கிறது இந்த நோய் தடுப்பு மையத்தின் ஆய்வு. இதே கால அளவில் வேலை செய்யும் ஆண்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறுகிறது இந்த ஆய்வு. பெண்கள் 30 அல்லது 40 மணி நேரம் வேலை செய்தாலும் பிரச்சினைகள் ஏற்படுவதில்லையாம்.



பெண்கள் நீண்ட நேரம் வேலை செய்யும் போது ஏற்படும் கடுமையான மன அழுத்தம் அவர்களுடைய உடலையும் சேர்த்து பாதிக்கிறது. இதனால், ஹார்மோன்களின் சமநிலை பாதிப்படைந்து இன்சுலின் சுரப்பு குறைந்து சர்க்கரை வியாதிக்கு வித்திடுகிறது.

இந்த ஆய்வறிக்கை BMJ Open Diabetes Research and Care என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த இந்த ஆய்வினை மேற்கொள்ள 35லிருந்து 74 வயதுள்ள 7065 பணியாளர்களை தேர்ந்தெடுத்து 12 வருட காலம் ஆய்வுக்கு உட்படுத்தினர். 

இவர்களை நான்கு பிரிவினுள் அடக்கினார்கள். அதில், 15-34 மணி நேரம் வேலை செய்தவர்கள், 35-40 மணி நேரம் வேலை செய்தவர்கள் 41-44 மணி நேரம் பணிபுரிந்தவர்கள் மற்றும் 45 மணி நேரம் வேலை செய்தவர்கள் என்று பிரித்தெடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அதிக நேரம் வேலை செய்த பெண்களில் 63 சதவிகித்த்தினருக்கு சர்க்கரை நோய் ஏற்படும் அபயாம் அதிகமிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இது, ஆண்களில் வயதானோருக்கும், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கும் தான் ஏற்படுமாம். மேலும், 2030ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 439 மில்லியன் நபர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் என கணிக்கப்பட்டுள்ளது. 



இந்த எண்ணிக்கை, 2010ஆம் ஆண்டில் சர்க்கரை நோய் வந்தவர்களின் எண்ணிக்கையை விட 50 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டில் உலகளவில் சர்க்கரை வியாதிக்கென செலவிடப்பட்ட தொகை 1.31 லட்சம் கோடி டாலர்கள் ஆகும்.

Popular Feed

Recent Story

Featured News