Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 24, 2018

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை (B.Sc., (Hons.) Agriculture) , இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளம் அறிவியல் தோட்டக்கலை(B.Sc., (Hons.) Horticulture) ஆகிய படிப்புகளுக்கான 1,300 இடங்களுக்கு அனுமதி சேர்க்கை பதிவுகள் இணையதளம் மூலம் 26-04-2018 முதல் 25-06-2018 வரை மேற்கொள்ளப்பட்டன.



இதில் இளம் அறிவியல் வேளாண்மை படிப்புக்கு 8,244 விண்ணப்பங்களும், இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) பிரிவுக்கு 2,202 விண்ணப்பங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 887 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில் தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, சமவாய்ப்பு எண் (ரேண்டம்) 4.07.2018 அன்றும், தரவரிசைப் பட்டியல் 12.07.2018 அன்றும் வெளியிடப்பட்டன.

இளநிலை அறிவியல் வேளாண்மை படிப்புக்காக திங்கள்கிழமை தொடங்கிய கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 39 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 13 பேர் பங்கேற்றனர். 



அவர்களில் 7 பேர் தகுதி பெற்றனர். முதல் நாளில் பொது இடங்களுக்கு 634 மாணவர்கள் அழைக்கப்பட்டு, அவர்களில் 181 பேர் தகுதி பெற்றனர்.
இவர்களில் மாணவர் எஸ்.தமிழரசன் (டி.பழுர், அரியலூர்), மாணவி த.சத்யா (தருமபுரி), மாணவர் கே. சிலம்பரசன் (தம்மம்பட்டி, சேலம்) ஆகியோருக்கு துணைவேந்தர் வே.முருகேசன், பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆகியோர் சேர்க்கைக்கான அனுமதி கடிதத்தை வழங்கி பேசினர்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்