Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 23, 2018

கால்நடை மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வு நாளை தொடக்கம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) தொடங்க உள்ளது.

மொத்தம் 460 இடங்கள்: இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. 



பி.டெக். உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.

ஜூலை 24 முதல் கலந்தாய்வு: இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) மற்றும் உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. 



இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வு ஜூலை 24-ஆம் தேதி தொடங்குகிறது.

சிறப்புப் பிரிவினருக்கு...முதல் நாளான செவ்வாய்க்கிழமை பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பு மற்றும் பி.டெக் படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். காலை 11.30 மணிக்கு பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பில் தொழில்கல்வி பிரிவினருக்கான ஒதுக்கீடு நடைபெறும். இந்த ஒதுக்கீட்டுக்கு 18 இடங்கள் உள்ளன. 

பொதுப் பிரிவினருக்கு...

பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும். பி.டெக் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்புக் கடிதம்: சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை மாணவர்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.



அழைப்புக் கடிதம்: சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை மாணவர்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.