Sunday, July 29, 2018

'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல், மாணவர்கள் கூடுதலாக சேர்க்கை -அமைச்சர் செங்கோட்டையன்

''அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல், மாணவர்கள் கூடுதலாக சேர்க்கையாகி உள்ளனர். 

புதியபாடத்திட்டத்தால், ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்,'' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலுார், காந்தி கல்வி நிலையத்தில், ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா நேற்று நடந்தது. 



இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை அடுத்தாண்டு சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தமிழை பாதுகாக்க வேண்டும். தமிழோடு சேர்ந்து, சிறப்பாக ஆங்கிலம் கற்றுத்தர வேண்டும் என, இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. 

உங்களை பாதுகாக்கும் அரசாக இருக்கும். ஒன்பதுமுதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அனைத்தும் கணினி மயமாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒரு வகுப்பில் மட்டுமே, ஆங்கில வழிக்கல்வி போதிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது கூடுதலாக மாணவர்கள் எண்ணிக்கைஇருந்தால், 50 சதவீதம்ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறையை உருவாக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல், மாணவர்கள் கூடுதலாக சேர்க்கையாகி உள்ளனர். புதிய பாடத்திட்டத்தால், ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்.



இதுவரை, ஆங்கில வழிக்கல்வியில் பயில்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கி வந்தோம். அதை மாற்றி, தமிழ் வழியில் பயிலும் சிறந்த, 960 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.உயர்நிலைப்பள்ளி மாணவனுக்கு, 10 ஆயிரம் ரூபாய், மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News