Saturday, July 7, 2018

செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு இனி இதுதான் தண்டனை... ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாக, செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை பறிமுதல் செய்யும்படி அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது ஐகோர்ட்.

இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.



சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால், இந்திய சாலைகள் தினந்தோறும் பல லட்சக்கணக்கான விபத்துக்களை சந்தித்து கொண்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்டுவது ஆகியவையே பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக உள்ளன.

எனவே டூவீலரில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில் செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மேலும் ஒரு அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.



உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் ஐகோர்ட்தான் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், சாலை பாதுகாப்பை அதிகரிப்பதற்காக இந்த கடுமையான உத்தரவை ஐகோர்ட் வழங்கியுள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்களின் செல்போன்களை 24 மணி நேரத்திற்குள் பறிமுதல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால், பலர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். சிலர் கை, கால்களை இழக்க நேரிடுகிறது. ஆனால் ஒரு சில கார்களில் பில்ட் இன் ஹேண்ட்ஸ் ப்ரீ சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இதன்மூலம் காரை ஓட்டி கொண்டிருப்பவர், சாலையில் இருந்து கண்களை எடுக்காமலேயே, கால்களை அட்டெண்ட் செய்ய முடியும். ஆனால் இந்த வசதி தற்போதைக்கு ஒரு சில கார்களில் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அதே நேரத்தில் ஒரு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேச இயர்போன் பயன்படுத்துகின்றனர். ஆனால் பல இரு சக்கர வாகன ஓட்டிகள் கழுத்துக்கும், காதுக்கும் இடையில் சாண்ட்விச் போல செல்போனை வைத்து கொள்கின்றனர்.

கழுத்தை சாய்த்து கொண்டு, செல்போனில் பேசியபடியே செல்வதால், அவர்கள் விபத்துக்களில் சிக்க நேரிடுகிறது. எனினும் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் புதிய உத்தரவால், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையில் பெயரளவுக்குதான் அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News