தமிழகத்தில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதித் தேர்வு தேதிகள், விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வு கால அட்டவணையும், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை : காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை; அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை, இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை.
9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை: காலாண்டுத் தேர்வு- செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை; அரையாண்டுத் தேர்வு- டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை.
இறுதித் தேர்வு: ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (9-ஆம் வகுப்பு மட்டும்).