Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 6, 2018

இரவில் தூங்கச் செல்லும் முன் செய்யக்கூடாதவை...

தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் குளிக்கும் பழக்கம் இருப்பவர்கள் உலர்ந்த ஆடைகளை அணிந்து தூங்கச் செல்ல வேண்டும்.

பெண்களில் சிலர் சோம்பலால் அணிந்து கொள்ள தேர்ந்தெடுத்த உள்பாவாடைகள் அல்லது நைட்டியால் சருமத்தைத் துடைத்து விட்டு அதை ஈரத்துடன் அப்படியே அணிந்து கொண்டு படுக்கைக்குச் சென்று விடுகிறார்கள்.



இதனால் சருமப் பிரச்னைகள் வரலாம். ஆண்களும் கூட சோம்பல் காரணமாகவோ அல்லது வெட்கை காரணமாகவோ உடலை ஈரம் போகத்துடைக்காமல் அப்படியே லுங்கியோ அல்லது இரவாடைகளையோ அணிந்து கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

இரவில் தூங்கச் செல்லும் முன் சிகரெட் புகைக்கவோ, ஆல்கஹால் அருந்தவோ அல்லது காஃபி, டீ அருந்தவோ கூடாது. காஃபி , டீயெல்லாம் அருந்த விரும்பினால் மாலை 5 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.
இரவில் உடற்பயிற்சி செய்யக்கூடாது.

தலைமுடியை இறுக்கிப் பின்னி ஜடையோ, கொண்டையோ போட்டுக் கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். கழுத்து வலி, பிடறி வலி, தோள்பட்டை வலி, தலை வலி எல்லா வலிகளுக்கும் மூலகாரணம் இதுவே. எனவே மென்மையாகத் தலை வாரி தளரப் பின்னலிட்டுக் கொண்டு தூங்கச் செல்லுங்கள். தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு தூங்குவதும் தவறு, நீளமான, அடர்த்தியான தலைமுடி கொண்டவர்களுக்கு சிக்கு விழுந்து முடி கொட்டும் பிரச்னைக்கு இட்டுச் செல்லும்.



ஆண்களோ, பெண்களோ, குழந்தைகளோ அல்லது முதியவர்களோ எவராயினும் இரவுகளில் வயிறு முட்டச் சாப்பிடுவது தவறு... இப்போது பல குடும்பங்களில் இரவுகளில் தான் பீட்ஸா, பர்கர், பிரியாணி, என்று வெளுத்து வாங்குகிறார்கள் போதாக்குறைக்கு விளம்பரங்களில் தாக்கத்தில் சாப்பிட்டுமுடித்ததும் சாக்லெட்டுகளும், ஐஸ்கிரீம்களும் வேறு உண்ணும் பழக்கம் பலருக்கு வந்து விட்டது. இது தவறான பழக்கம். இரவில் அருந்தத் தோதான ஒரே பானம் வெது வெதுப்பான பால் அல்லது சுக்குத்தண்ணீர் மட்டுமே.

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம், மாம்பழம் போன்றவற்றை ருசியில் மயங்கி அளவின்றி உண்பது கூடாது. இரவில் உண்ணத்தகுந்த பழங்கள் வாழைப் பழம் மற்றும் கொய்யாப்பழங்கள் மட்டுமே. அவற்றையும் கூட உணவோடு சேர்த்து ஒன்று அல்லது இரண்டு என அளவாக உண்ண வேண்டும்.

இரவுகளில் முட்டை, கோழி, ஆடு, மீன் போன்ற அசைவ உணவு கூடாது. அவை அஜீரணக் கோளாறுக்கு இட்டுச் செல்லும். இன்று பலரும் இரவில் தூக்கம் வராமல் தவிப்பது இரவுகளில் வயிறு முட்ட உண்பதால் தான்.

இரவில் 8 மணிக்கு மேல் எந்த உணவையும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. எதை உண்பதாக இருந்தாலும் 8 மணிக்கு முன்பே முடித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கல்லீரல் தன் பணி முடித்து சற்றே ஓய்வில் இருக்கும் நேரம் அது. அப்போதும் அதற்கு வேலை கொடுத்து வயிற்றுக்குள் எதையேனும் தள்ளி அவஸ்தைப்படுத்திக் கொண்டிருந்தால் ஜீரண மண்டலம் மொத்தமும் குழப்பத்தில் ஆழ்ந்து சீரான உடல்நலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலுமே இரவில் படுக்கைக்குச் செல்லும் போது அதி இனிப்பான பண்டங்களைத் தவிர்த்து விடுதல் நலம். ஒருவேளை தவிர்க்க முடியாமல் எதையேனும் உண்பதாக இருந்தாலும் சிரமம் பாராமல் இரவில் பல் துலக்க மறக்காதீர்கள்.

இனிப்புகளை உண்டு விட்டு பல் துலக்க மறந்து படுத்தால் பல் இடுக்குகளில் சிக்கும் இனிப்புகளில் தொற்றும் பாக்டீரியாக்களால் பற்குழி, பற்சொத்தை உண்டாகும்.



இரவில் குளித்து விட்டுத் தூங்கச் செல்பவர்கள் முகம் மற்றும் சருமத்துக்கு பெளடர் போட்டுக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இரவில் தூங்கும் போது டால்கம் பெளடரினால் சருமத்துளைகள் அடைத்துக் கொண்டு ஒவ்வாமை ஏற்படலாம். வேண்டுமானால் சருமத்தின் மிருதுத் தன்மையைத் தக்க வைத்துக் கொள்ள மாஸ்சரைஸிங் கிரீம் அல்லது ஆலிவ் ஆயில் தேய்த்துக் கொண்டு படுக்கலாம்.

இரவில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுக்கக் கூடாது.

இரவில் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு தூங்கக் கூடாது. பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். குழந்தைகளுக்கு உறுத்தக் கூடிய விதத்திலான கரடு முரடான ஆடைகளைத் தவிர்த்து விடுவது நல்லது. மென்மையான பருத்தி ஆடைகளே சரும நலனுக்கு உகந்தது.

இரவுகளில் அதிக நேரம் கண்விழித்துப் படிக்கக் கூடாது. தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களும் கூட இரவில் 10 மணிக்குள் பாடங்களை முடித்துக்கொண்டு மீண்டும் அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதே நல்லது. ஏனெனில் அதிகாலை நேரமே படிக்கும் பாடங்களை மனதில் இருத்திக் கொள்ளவும், புரிந்து படிக்கவும் ஏற்ற காலம்.

இரவில் தூங்கச் செல்லும் முன் நிறையத் தண்ணீர் அருந்தக்கூடாது. ஏனெனில், ஒரே தடவையில் ஒரு சொம்புத் தண்ணீரைக் குடித்து விட்டுப் படுக்கைக்குச் சென்றால் இரவு முழுவதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வே மிகுந்திருக்கும். இதனால் தூக்கம் கெடும். சோர்வு மிகும். காலையிலும் எந்த வேலையிலும் பூரணமாக ஈடுபட முடியாமல் தூக்கக் கலக்கமாகவே இருக்கும்.

இரவில் அதிக நேரம் இணைய வசதியுடனான ஸ்மார் ஃபோன் அல்லது மடிக்கணினியில் மூழ்கிப் போதல் கூடாது. ஸ்மார்ட் ஃபோன்களில் இருந்து இரவு 12 மணிக்கு கசிவதாகக் கருதப்படும் காஸ்மிக் கதிர்களால் ஒட்டுமொத்த மனித ஆரோக்யத்துக்குமே மிகப்பெரிய கேடு.

மடிக்கணினியில் மூழ்கிப் போனால் மறுநாளைய அத்தனை வேலைகளும் கெடும் என்பதோடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் மலட்டுத் தன்மை ஏற்படவும் அதுவே முக்கிய காரணமாகவும் ஆகி விடுவதால் அத்தகைய பழக்க்கங்களை தொடராமலிருப்பது நல்லது.



முக்கியமாகக் குழந்தைகளை இந்தப் பழக்கங்களை அண்ட விடாமல் பாஸிட்டிவ்வான வேறு பழக்க் வழக்கங்களில் ஈடுபட வைப்பது பெற்றோர்களின் கடமை.

இரவில் அதிக நகைகள் அணிந்து கொண்டு தூங்கக் கூடாது.

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் அலுவலக டென்சன், நம்மை வஞ்சித்தவர்கள் குறித்த நினைவுகள் மற்றும் அடுத்தவர் பாலான பொறாமை, கோபம், பழி தீர்த்தல் உள்ளிட்ட கெடுமதியான எண்ணங்களுடன் தூங்கச்செல்லக் கூடாது.

இரவுத் தூக்கத்துக்காக தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்வது முற்றிலும் கூடாத விஷயம்.

Popular Feed

Recent Story

Featured News