Thursday, July 19, 2018

மாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்குள் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு

"அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை
குறைந்தால் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு தற்காலிக பணிமாற்றம் செய்யப்படுவர்," என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் எச்சரித்தார்

சி.இ.ஓ., அலுவலகத்தில் மதுரை, மேலுார் கல்வி மாவட்டங்களின் அரசு உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கூட்டம் கோபிதாஸ் தலைமையில் நடந்தது. டி.இ.ஓ.,க்கள் அமுதா, ஜமுனா, நேர்முக உதவியாளர் சின்னதுரை பங்கேற்றனர்.

சி.இ.ஓ., பேசியதாவது: ஜூலை 31க்குள் 'எமிஸ்' பணிகளை முடிக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2வில் ஒரு குரூப்பில் குறைந்தது 15 - 20 மாணவர் இருக்க வேண்டும்

செப்., 30க்குள் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் அதிக மாணவர் உள்ள பள்ளிக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பப்படுவர்.பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

ஆக.,14க்குள் வாசிப்பு திறனை அதிகரித்து, 'இன்ஸ்பயர்' விருதுக்கு அதிக மாணவர்களை தயார்படுத்த வேண்டும்

உரிய நேரத்தில் ஆசிரியர் பள்ளிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும், என்றார்.தலைமை ஆசிரியருக்கு '34'ஒவ்வொரு மாதமும் தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 34 காலங்கள் கொண்ட படிவம் அளிக்கப்பட்டது

அதில் ஆசிரியர் வருகை விபரம், வருகை பதிவை முடிக்கும் நேரம், மருத்துவ விடுப்பு எடுத்த ஆசிரியர் விபரம், ஆசிரியர் கற்பித்தல் திறனை மதிப்பிடுதல் உட்பட விபரங்கள் கேட்கப்பட்டிருந்தது

இதை நிரப்பி சி.இ.ஓ.,விடம் நேரடியாக தலைமையாசிரியர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது

இதுபோன்ற படிவம் வழங்கி அறிக்கை விபரம் கேட்பது முதல்முறை," என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News