G.O 152 DATED-24.07.2018-பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 28, 2018

G.O 152 DATED-24.07.2018-பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு

இது குறித்து பள்ளிக் கல்வித்துதுறையில்  தொழில்கல்வி மற்றும் கலைப் பிரிவுகளில் முதன்மைப் பாடப் பிரிவுகளின் பெயர்கள், முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்து கலைத்திட்ட வடிவமைப்பு(curriculum) குழு மற்றும் உயர்மட்டக் குழு ஆகியவை பரிந்துரை செய்துள்ளன. 



அதற்கு மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தவிர மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், இதுவரை கணினி அறிவியல் பாடம் மட்டுமே அனைத்து பிரிவுகளுக்கும் ( அறிவியல் மற்றும் கலைப் பிரிவு) இருந்து வருகிறது.

இதில் கணினி அறிவியல் பாடத்தை மூன்று வகையாக நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார். 




அவரைத் தொடர்ந்து மேனிலைப் பாடப்பிரிவுகளில் தொழில் கல்வி பாடப்பிரிவுகளின் பெயர்கள் மாற்றம் செய்துள்ளதற்கும், முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்ததற்கும், வணிக கணிதம், புள்ளி இயல், அறிவியல், இந்திய பண்பாடு, செவிலியம் பொது என்று பாடப் பெயர்கள் மாற்றம் செய்துள்ளதற்கும், புதிய ெ தாழில் கல்வி மற்றும் கலைப் பிரிவு பாடப் பிரிவுகளின் பெயர் மற்றும் முதன்மை பாடங்கள் மாற்றம் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்புக்கும், 2019-2020ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்புக்கும் நடைமுறைப்படுத்த அரசாணை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்கலாம் என்று முடிவு செய்துள்ளது. அதன்படி மேனிலைப் பாடப் பிரிவுகளில் முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்துள்ளதற்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.

இதன்படி,

  • அறிவியல் பிரிவு(இயற்பியல், வேதியியல், கணிதம்) கணினி அறிவியல் முதன்மைப் பாடமாக இருக்கும்.
  • கலைப்பிரிவுகளில் 3 வகை உள்ளது. இவற்றுக்கு கணினி பயன்பாடு முதன்மைப்பாடமாக இருக்கும்.
  • தொழில் கல்வியில் 10 பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு கணினி தொழில் நுட்பம் முதன்மைப் பாடமாக இருக்கும்.
  • பொது இயந்திரவியல் என்பது அடிப்படை இயந்திரவியல் என்று மாற்றப்பட்டுள்ளது. 

இதற்கு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு கணக்கு, அடிப்படை இயந்திரவியல் கருத்தியல், கணினி தொழில் நுட்பம், அடிப்படை இயந்திரவியல் செய்முறை ஆகியவை முதன்மைப்பாடங்களாக இருக்கும்.



Post Top Ad