Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 22, 2018

TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா?



டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார். 



இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்குப்பின் தகுதித்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு செய்து 2013ம் ஆண்டு முதல் பணிக்காகக் காத்திருப்போர் தமிழக அரசு அண்மையில் தந்துள்ள புள்ளிவிவரப்படி 82 ஆயிரம் பேர்களாவர்.

தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கே மீண்டும் ஒரு தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் முறை இரண்டையும் எதிர்த்துப் போராடியதால் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் பணிநியமனத்திற்குக் கடைப்பிடித்து வந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 



எனினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தித்தான் பணியளிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.