Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 10, 2018

ஆயிரம் நாணயங்கள் - முல்லா நீதி கதைகள் (1000 Coins - Mulla Stories for Kids)

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
முல்லாவிற்கு கடவுளிடம் சத்தமாக வேண்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. தினமும் ஒரே வேண்டுதலை, ஒரே விதமாக வேண்டிக்கொள்வார். ஒரு நாள், "கடவுளே எனக்கு ஆயிரம் நாணயங்கள் வேண்டும். அதில் ஒரு நாணயம் குறைந்தாலும் வாங்க மாட்டேன்." என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தார்.



முல்லாவின் வேண்டுதலை தினமும் கேட்டுக்கொண்டு இருந்த பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவை ஏமாற்ற நினைத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டிற்கு சென்று தன்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்து 999 நாணயங்களை ஒன்றாக ஒரு சிறிய பையில் கட்டிக்கொண்டு முல்லாவின் வீட்டை நோக்கி ஓடினார்.

முல்லாவின் வீட்டை அடைந்ததும் அந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர் தான் கொண்டு வந்த பண பையை முல்லாவின் ஜன்னல் வழியாக முல்லாவை நோக்கி வீசினார்.

முல்லா வேண்டுதலை முடித்த பிறகு அருகில் ஒரு பை இருப்பதை பார்த்தார். அதை திறந்து பார்த்த போது உள்ளே நாணயங்கள் இருப்பதை கண்டார். உடனே கடவுள் தான் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார் என கூறிக்கொண்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்து நாணயங்களை என்ன தொடங்கினார்.

முல்லா காசை என்ன தொடங்கிய பொழுது அதை ஜன்னல் வழியாக அந்த பக்கத்து வீட்டுக்காரர் வேடிக்கை பார்த்தார். முல்லாவோ நாணயங்களை எண்ணி முடித்த பிறகு அதில் நாணயங்கள் மட்டுமே இருந்தது.



பின்னர் முல்லா, "நன்றி கடவுளே, ஆனால் மீதம் உள்ள 1 நாணயத்தை சீக்ரம் குடுத்து விடு" என கடவுளிடம் வேண்டினார். இதை சற்றும் எதிர்பாராத பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று இந்த பணப்பை என்னுடையது, நான் தான் உன் வீட்டிற்குள் தூக்கி எறிந்தேன் என்னிடம் குடுத்து விடு என முல்லாவிடம் கெஞ்சினார். ஆனால் முல்லாவோ கடவுள், "உன் மூலமாக எனக்கு உதவி செய்துள்ளார் என கூறி, உனக்கு குடுக்க இயலாது" என்று கூறிவிட்டார்.

வேறு வழி இல்லாமல் அந்த பக்கத்து வீட்டுக்காரர் பஞ்சாயத்துக்கு போகலாம் என்று முல்லா விடம் கூறிவிட்டார். ஆனால் முல்லாவோ, "எனக்கு உடல் நிலை சரி இல்லை, மேலும் என்னால் நடக்கவும் இயலாது", என்று கூறினார். அதற்கு அந்த பக்கத்து வீட்டுக்காரர், "என்னுடைய கழுதையை தருகிறேன் வா", என்று முல்லாவிடம் கூறினார். அதற்கு முல்லாவோ, என்னுடைய உடையை பார் அழுக்காக உள்ளது என்று கூறினார்.

அதற்கு முல்லாவோ, என்னுடைய உடையை பார் அழுக்காக உள்ளது என்று கூறி, அவருடைய உடையையும் வாங்கிக்கொண்டு பஞ்சாயத்துக்கு சென்றார்.

இருவரும் நீதிபதியிடம் வந்து சேர்க்கின்றனர். நீதிபதி முழு கதையையும் கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் முல்லாவோ, நீதிபதி அவர்களே அவனை நம்பாதீர்கள். அவன் இப்பொழுது எல்லாம் மற்றவர்களின் பொருட்களை எல்லாம் தன்னுடையது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றல் என்னுடைய துணியையும், எனக்கு பின்னல் நிற்கின்ற கழுதை இரண்டையும் என்னுடையது என்றே சொல்லுவான்.

அடுத்த நொடியே அந்த பக்கத்து வீட்டுக்காரர், முல்லா அணிந்துள்ள துணி மற்றும் அந்த கழுதை இரண்டு என்னுடையது என்று நீதிபதியிடம் கூறினான்.

நீதிபதி, பார்த்தீர்களா, எனக்கு இப்பொது புரிந்து விட்டது. முல்லா நீ உனது பண பையை எடுத்து செல்லலாம். இதை கேட்டு அந்த பக்கத்து வீட்டுக்காரர் தான் ஏமாற்ற பட்டத்தை அறிந்து கண்ணீர் விட்டார்.



இறுதியில் முல்லாவோ அந்த பண பையையும் , அந்த கழுதையையும் எடுத்துக்கொண்டு இல்லம் நோக்கி நடந்தான்.

நீதி: முட்டாள் தனம் இழப்பையே தரும்.

Popular Feed

Recent Story

Featured News