தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.10) தொடங்க உள்ளது.
அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இடங்களைப் பெற்றவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் புதன்கிழமைக்குள் (ஆக.8) சென்று சேர வேண்டும். அகில இந்திய கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், இடங்களைப் பெற்று மாணவர்கள் கைவிட்ட அனைத்தும் புதன்கிழமை மாலை அந்தந்த மாநிலங்களிடம் திரும்பிச் சமர்ப்பிக்கப்படும்.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இடங்களைப் பெற்றவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் புதன்கிழமைக்குள் (ஆக.8) சென்று சேர வேண்டும். அகில இந்திய கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், இடங்களைப் பெற்று மாணவர்கள் கைவிட்ட அனைத்தும் புதன்கிழமை மாலை அந்தந்த மாநிலங்களிடம் திரும்பிச் சமர்ப்பிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து அகில இந்திய கலந்தாய்வில் நிரம்பாமல் சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்று கல்லூரிகளில் மாணவர்கள் சேராத இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org www.tnmedicalselection.org ஆகிய இணையதங்களில் விரைவில் வெளியிடப்படும்.