Saturday, August 25, 2018

1.2 கோடி வேலைகள் உருவாக்கம்!

1.2 கோடி வேலைகள் உருவாக்கம்!

ஜூன் வரையிலான கடந்து 10 மாதங்களில் 1.2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.



புதிதாக வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளவர்களின் அடிப்படையில் மத்திய புள்ளியியல் அலுவலகம் வேலைவாய்ப்பு மேற்பார்வை அறிக்கை ஒன்றைத் தயார் செய்துள்ளது. ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO) மற்றும் ஊழியர்களுக்கான மாநில காப்பீட்டுத் திட்டத்தில் (ESIC) இணைந்தவர்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், ’2017 செப்டம்பர் மாதம் முதல் 2018 ஜூன் மாதம் வரையிலான 10 மாதங்களில் 1,19,66,126 பேர் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மே மாதத்தில் 13,18,395 பேர் இணைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதார்களாக 6,10,573 பேர் உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய புள்ளியியல் அலுவலகம் முதன்முறையாக அமைப்பு சார்ந்த துறைகளின் வேலைவாய்ப்புகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 



2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான அமைப்பு சார்ந்த துறைகளில் எவ்வளவு பேர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர் என்ற அடிப்படையில் அந்த ஆய்வறிக்கை வெளியானது. மேலும் இந்த அறிக்கைகள் வேலைவாய்ப்பு விவரங்கள் குறித்த முழுமையான அறிக்கை அல்ல என்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News