பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை ஆகஸ்ட் 13-ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழையும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு எழுதியவர்கள், தங்களுக்கான தேர்வு முடிவுகளை மதிப்பெண் சான்றிதழாகவே வருகிற 13-ஆம் தேதி பிற்பகல் முதல் இருந்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைச் சமர்ப்பித்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மறு கூட்டல்: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சிறப்பு துணைத் தேர்வர்கள், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 16, 17 ஆகிய இரு தினங்களில் நேரில் சென்று, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு தலா
ரூ. 550, பிற பாடங்களுக்கு தலா ரூ. 275 கட்டணம் செலுத்த வேண்டும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்குத் தலா ரூ. 305, பிற பாடங்களுக்கு தலா ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும்.