Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 10, 2018

வரும், 16ல் கூட்டுறவு சங்க தேர்தல்!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை:'பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த,
484 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், வரும், 16ல் நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.



தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், முதற் கட்டமாக, நான்கு நிலைகளாக நடந்தது. புகார்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை உட்பட, பல்வேறு காரணங்களால், 484 சங்கங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுக்கு தேர்தல் நடத்த, தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன்படி, நாளை, வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வாபஸ் பெற விரும்புவோர், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்குள் வாபஸ் பெற வேண்டும்.இறுதி வேட்பாளர் பட்டியல், 13ல் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு தேவைப்பட்டால், வரும், 16ல் தேர்தல் நடைபெறும். மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.

'சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல், வரும், 21ல் நடைபெறும்' என, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர், ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News