Saturday, August 25, 2018

நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கான 2017 - 18 விருதுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது

2017 ஆம் ஆண்டிற்கான தமிழகத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது ..! மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்னன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 யை ஆசிரியர் தினமாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளை, நாடும் முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறோம்.



டாக்டர் ராதாகிருஷ்னன் அவர்கள் ஆசிரியர் பணியை மிகவும் விரும்பி செய்ததால், அவருடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், அந்த நாளில் நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும், அனைத்து மாநிலங்களுக்கும் தலா 20 ஆசிரியர்களுக்கும் மேல், விருது வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, தகுதியற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுவதை தடுக்க, இந்த ஆண்டு முதல், நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும் என மனிதவள மேம்பாட்டு துறை சமீபத்தில் தெரிவித்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 23 என்று எண்ணிக்கையில், மத்திய அரசால் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு 1 அல்லது 3 நபர்களுக்கு மட்டுமே மத்திய அரசின் ஆசிரியர் விருது கிடைக்கும் என்ற நிலை உருவாக்கியது. 



இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான, தமிழகத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பணிபுரியும் ஸதி என்ற ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர் ஸதி அவர்கள் தெரிவிக்கையில், இந்த விருதை தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். இந்த விருதால், தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். மேலும் இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன எனவும் அந்த ஆசிரியை தெரிவித்தார். 

மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறோம் - தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான கோவையை சேர்ந்த ஸதி புதிய தலைமுறைக்கு பேட்டி.



தமிழகத்திற்கு பொதுவாக கடந்த வருடம் வரை 23 விருதுகள் வரை கிடைக்கும். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றத்தினால், இந்த வருடம் ஒரே ஒரு விருது மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Popular Feed

Recent Story

Featured News