Tuesday, August 7, 2018

அணுசக்தி மையத்தில் 224 வேலைகள்

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 224 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.



இது பற்றிய விவரம் வருமாறு:-

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மும்பையில் செயல்படுகிறது. மத்திய அரசு நிறுவனமாக இதில் தற்போது ஸ்டிபென்டியரி டிரெயினி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கேட்டகரி 1 பிரிவில் 86 இடங்களும், கேட்டகரி 2 பிரிவில் 138 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

கேட்டகரி 1 பணி விண்ணப்பதாரர்கள் 19 வயது முதல் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். கேட்டகரி 2 பணி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 22 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்கள் கேட்டகரி 1 பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் கேட்டகரி 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

கேட்டகரி 1 பணி விண்ணப்பதாரர்கள் ரூ.150-ம், கேட்டகரி 2 பணி விண்ணப்பதாரர்கள் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை



விருப்பமும்் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.இதுபற்றிய விரிவான விவரங்களை http://www.barc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Popular Feed

Recent Story

Featured News