Wednesday, August 29, 2018

பழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் - அரசுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல்

பழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே, ரூ.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள குடியிருப்பு கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் மூலம் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார்.



மேலும், கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 40 கண்டெய்னர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர், 20 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட ரூ. 2 கோடியே 64 லட்சம் மதிப்பிலான அத்யாவசியப் பொருட்கள் அடங்கிய 30 லாரிகளை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Popular Feed

Recent Story

Featured News