Tuesday, August 7, 2018

நாடு முழுவதும் 24 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன மத்திய மந்திரிகள் தகவல்

வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் தலைவிரித்தாடும் நிலையில், நாடு முழுவதும் 24 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. அரசுப்பணிகளில் காலியிடங்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய மந்திரிகள் பதில் அளித்தனர். 



அதில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் மொத்தம் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 

இங்கு 2 லட்சத்து 24 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் காவல் துறையில் 5 லட்சம் பணியிடங்களும், ரெயில்வே மற்றும் சுகாதாரத்துறையில் 4 லட்சம் பணியிடங்களும் உள்ளன.



எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 2 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ராணுவத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பணியிடங்களும், நீதித்துறையில் நீதிபதிகள் உள்பட 5 ஆயிரம் பணியிடங்களும், அங்கன்வாடி மையங்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் பணியிடங்களும், தபால் துறையில் 54 ஆயிரத்து 263 இடங்களும் காலியாக இருப்பதாக மத்திய மந்திரிகள் தெரிவித்து உள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News