Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 11, 2018

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை: 268 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அகில இந்திய கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் கைவிட்ட இடங்கள் என மொத்தம் 268 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது.



தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 3,501 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1,198 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்குப் பின்னர் நிரம்பாத இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்காக வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டன.

அகில இந்திய கலந்தாய்வின் முடிவில் தமிழகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்று மாணவர் சென்று சேராத இடங்கள் என அனைத்து இடங்களுக்குமான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸ்ட் 13-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.



இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியது: அகில இந்திய கலந்தாய்வுக்கு பின்னர் 98 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது தவிர, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மொத்தம் 241 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன. 

இது தவிர சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 27 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றார் அவர்.



Popular Feed

Recent Story

Featured News