Friday, August 10, 2018

7வது சம்பள கமிஷன்.. விரைவில் சம்பள உயர்வு மற்றும் 3 ஆண்டுக்கான நிலுவை தொகை வழங்க வாய்ப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை சம்பளத்தினை 3.68 மடங்காக உயர்த்திக் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் சென்ற முறை அடிப்படை ஊதியத்தினை2.57 சதவீதம் மட்டுமே உயர்த்தி இருந்தனர்.



இந்நிலையில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தங்களது சம்பளம் போதியதாக இல்லை என்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அகவிலைப்படியும் போதிய அளவில் வழங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு ஊழியர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தனர்.

அருண் ஜேட்லி

மத்திய அமைச்சராக அருண் ஜேட்லி இருந்த போது மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும் முடிவை அளிக்கும் என்று தெரிவித்து இருந்த நிலையில் எந்த ஒரு சாதகமான முடிவினை எடுக்கவேயில்லை.

தேர்தல்
ஆனால் 2019 ஆண்டுப் பொதுத் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வரவிருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவர சம்பள உயர்வினை ஒரு முக்கிய ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தும் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.




எப்போது சம்பள உயர்வு அறிவிப்பு வரும்?
எப்போது சம்பள உயர்வு அறிவிப்பு வரும்?
மத்திய அரசு ஆகஸ்ட் 15-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பினை வெளியிடும் என்று கூறப்படுகிறது


எவ்வளவு கிடைக்கும்?

தற்போது அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக உள்ள நிலையில் அது 21,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்றும் 3 வருடம் வரை நிலுவை தொகை அளிக்கப்படலாம் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்க்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

பயன்

மத்திய அரசின் சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்கப்பட்டால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயன் அடைவார்கள்.

ஆர்பிஐ



ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தியதால் பணவீக்கம் அதிகரிப்பது மற்றும் வீட்டு வாடகை படியையும் அரசு உயர்த்த வாய்ப்புகள் உள்ளது

Popular Feed

Recent Story

Featured News