அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந் தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி உடைய கவுரவ விரிவுரை யாளர்களின் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந் தரம் செய்யப்படுவர் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் கடந்த 30-ம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.
இந்த நிலையில், கவுரவ விரிவுரை யாளர்களை பணிநிரந்தரம் செய் வதற்கான ஆயத்தப்பணிகளை கல்லூரி கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது.தகுதியுடைய பேராசிரியர்கள்யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி உடைய கவுரவ விரிவுரையாளர் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியை ஆர்.சாருமதி அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
அரசு கலை அறிவியல் கல் லூரிகள் மற்று்ம் கல்வியி யல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் தற்போதைய யுஜிசி விதிமுறை களின்படி உதவி பேராசிரியர் நியமனத்துக்குரிய கல்வித்தகுதி யுடன் பணிபுரிவோரின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான விவரங்களையும், தங்கள் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பணியாளர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களின் இடமாறு தல் போன்ற காரணங் களினால் பணிவாய்ப்பை இழந்த கவுரவ விரிவுரையாளர்களின் விவரங் களையும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.