Thursday, August 30, 2018

கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

போலியான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஓவல் அலுவலக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ‘’கூகுள், ஃபேஸ்புக் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதில் கவனமாக இருக்கவேண்டும். கூகுள் ஏராளமான மக்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.



முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘’கூகுள் தேடுபொறி வழிமுறைகள், பழமைவாதக் குரல்களை ஓசையற்றதாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

கூகுளில் காட்டப்படும் ட்ரம்ப் சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்தும் போலியானவையாகவே உள்ளன. 96% செய்திகள் இடதுசாரிகளுக்கு ஆதரவாக உள்ளன.

பழமைவாதக் குரல்களை கூகுளும் மற்ற நிறுவனங்களும் அடக்கி ஆள்கின்றன. நாம் என்ன பார்க்கமுடியும், முடியாது என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள். இந்த ஆபத்தான சூழ்நிலை கவனத்தில் கொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்

Popular Feed

Recent Story

Featured News