Thursday, August 30, 2018

வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி.. புதிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கால வரம்பு அதிகமாகிறது!





டெல்லி: புதிதாக வாங்கப்படும் கார் மற்றும் பைக்குகளுக்கு அளிக்கப்படும் இன்சூரன்ஸ் கால வரம்பை அதிகப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது உள்ள கார் மற்றும் பைக்குகளுக்கு ஒன்றில் இருந்து இரண்டு வருடம் வரை மட்டுமே இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. அதன்பின் அதை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதிக்கு பின் வாங்கப்படும் கார் மற்றும் பைக்குகளுக்கு இன்சூரன்ஸ் கால வரம்பை அதிகப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி இனி இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் கார் மற்றும் பைக்குகளுக்கு மூன்று வருட இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

இதனால் இன்சூரன்ஸிற்கு மிகவும் அதிக அளவில் பணம் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கார்களுக்கு கூடுதலாக 24 ஆயிரம் ரூபாயும் பைக்குகளுக்கு கூடுதலாக 13 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டி இருக்கும்.

இந்தியாவின் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உடனடியாக இதை அமல்படுத்த வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமயங்களில் 5 வருடம் வரை கூட இந்த இன்சூரன்ஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது.



ஆனால் மற்ற விதிகளில் பெரும்பாலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இன்சூரன்ஸ் எந்த விதமான விபத்துகளுக்கும் அளிக்கப்படும், விபத்தை இன்சூரன்ஸ் பெறுபவர் ஏற்படுத்தி இருந்தால் எவ்வளவு பணம் வழங்கலாம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்த புதிய சட்டம் அடுத்த வருடம் மே மாதம் வரை வாகனம் வாங்கும் மக்களுக்கு பொருந்தும். 3ல் இருந்து 5 வருடங்களுக்கான மொத்த இன்சூரன்ஸ் தொகையையும் மொத்தமாக வாகனம் வாங்கும் நபர்கள் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News