1. உயிரியல் எரிபொருள் என்பது, புவியியல் செயல்பாடுகளால் அல்லாமல், உயிரிகளிலிருந்து பெறப்படும் எரிபொருள்.
2. எத்தனால், பயோ டீசல், கிரீன் டீசல், வெஜிடபிள் எண்ணெய், பயோ காஸ் ஆகியவை இவ்வகை எரிபொருட்களில் அடங்கும்.
3. ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களில், உயிரி எரிபொருள் கலக்கப்படும்.
4. எண்ணெய் மற்றும் கொழுப்பு சுரக்கும் எந்தவொரு செடியிலிருந்தும், உயிரி எரிபொருட்களைத் தயாரிக்க முடியும்.
5. கால்நடைக் கழிவுகள், வேளாண்மைக் கழிவுகள், உணவுக் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து உயிரி எரிபொருட்களைத் தயாரிக்க முடியும்.
6. உயிரி எரிபொருள் என்பது திரவம், வாயு அல்லது திட வடிவிலும் இருக்கும்.
7. வாகனங்கள் அனைத்தையும் உயிரி எரிபொருள் மூலம் இயக்க முடியும்.
8. பயோ டீசல் என்பது விஷத்தன்மை வாய்ந்ததும் அல்ல, எரியக்கூடியதும் அல்ல. ஆனால், மக்கும் தன்மை வாய்ந்தது.
10. ஜெர்மனி நாட்டில் பயன்படுத்தப்படும் டீசலில் 3% பயோ டீசல்.