இன்ஜினியரிங் பணிகளுக்கான போட்டி தேர்வில்,
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் விபரங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது
இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளுக்கான போட்டி தேர்வு, பிப்ரவரி, 24ல் நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை, 23ல் வெளியிடப்பட்டன; சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 332 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, அரசின், இ - -சேவை மையங்களுக்கு சென்று ஸ்கேன் செய்து, வரும், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தேர்வுக்கான விண்ணப்பத்தில், ஏற்கனவே பதிவு செய்த விபரங்களுக்கான சான்றிதழ்களை, கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்*
விண்ணப்பத்தில் தவறான தகவல்களை பதிவு செய்து, அதற்கான சான்றிதழ் இல்லை என்றால், 'தங்களிடம் சான்றிதழ் இல்லை' என, தேர்வுக்கட்டுப்பாடு அதிகாரிக்கு கடிதம் எழுதி, அதையும், 'ஸ்கேன்' செய்து, இணைப்பில் பதிவேற்ற வேண்டும்*
சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதுதொடர்பாக, சந்தேகங்கள் இருப்பின், 044 -2530 0306 என்ற, தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது*