Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 11, 2018

இருமுறை நீட் தேர்வு நடத்தும் திட்டம் மறுபரிசீலனை?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வை நடத்தும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை ஏற்று மறுபரிசீலனை செய்யும் முடிவை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தேர்வு இனி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இதேபோன்று, பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். அடுத்த ஆண்டில் இந்த இரு தேர்வுகளும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வுகள் இணையதளத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.




இந்நிலையில், நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதால் மாணவர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனால், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Popular Feed

Recent Story

Featured News